காரைக்காலில் சித்தர்கோவில் கண்டுப்பிடிப்பு: பொதுமக்கள் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2018 11:03
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 250ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சித்தர்கோவில் கண்டுப்பிடிப்பு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
காரைக்கால் மாவட்ட நிரவி அடுத்த ஊழியப்பத்து கிராமத்தில் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். அப்பகுதியில் கடந்த ஒருமாதங்களாக தொடர்ந்து இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெறும் அச்சத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் வெளியில் செல்லமுடியாத நிலையில் அச்சத்தில் இருந்தனர்.இதனால் அப்பகுதி மக்கள் ஆலத்தூர் பகுதியில் உள்ள சித்தர் கோவிலுக்கு சென்று அங்குள்ள தத்துவா சித்தரை சந்தித்து கிராமத்தில் உள்ள பிரச்சனைக்குறித்து அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதனால் தத்துவா சித்தர் நேற்று முன்தினம் ஊழியப்பத்து பகுதிக்கு வருகைப்புரிந்தார்.அப்போது கார் மூலம் வரும்போது தீடீர் என்று சாலையில் காரை நிறுத்தும்படி கூறினார்.பின் ஊழியப்பத்து சாலையோரத்தில் உள்ள பாலகுரு என்பவர் தோட்டத்திற்கு தத்துவா சித்தர் சென்றார். அப்போது தோட்டத்தில் ஒரு கட்டுப்பகுதி நடுவில் சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒருகோவில் பகுதியில் சென்று தத்துவா சித்தர் தீடீர் என்று கோவில் உள்ளே சென்று அமர்ந்து சிறப்பு பூஜைசெய்தார்.
அப்போது இக்கோவிலில் சித்தர் ஒருவர் கபாலமோட்சம் அடைந்துள்ளார் எனவே கோவிலை சூற்றியுள்ள மரங்களை சுத்தம் செய்யும்படி அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். பின் ஒரிரு நாட்களில் மிகப்பழமையான கோவிலில் சிறப்பு பூஜைசெய்யவேண்டும் என்று சித்தர் கூறியுள்ளார். மேலும் கடந்த 250ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள பாலகுரு என்பவர் குடும்பத்தினர் வெளிநாட்டில் பணியாற்றிவந்தனர். அவர்கள் சொந்தமான இடத்தில் கோவில் கட்டப்பட்டது. இதில் சிவனை வைத்து பர்மாவிலிருந்து வந்த பரிபூர்ணாந்தசாமி சித்தர் சிறப்பு பூஜைசெய்து வந்தார். பின் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்த்து வந்துள்ளார். பின் இரவு நேரத்தில் சித்தர் சிறப்பு பூஜைகள் செய்து வந்துள்ளார். அப்போது ஒருநாள் தீடீர் என்று கோவிலில் உள்ள சிவன் சிலை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.இதனால் பாலகுரு குடும்பத்தினர் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிவனை வழிப்பட்டுவந்த சித்தர் உடல்நிலை பாதிக்கபட்டு கபாலமோட்சம் அடைந்துள்ளார். இவரை அக்கோவிலில் சமாதியாக வைக்கப்பட்டுள்ளது.மேலும் கோவிலை சுற்றி விமானத்தளத்தில் சித்தர்,அம்மையார் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் மூலம் கட்டப்பட்டு கோவில் சிதளடைந்துள்ளது. பலஆண்டுகளாக பரமரிப்பு இல்லாமல் கோவில் புதார்மண்டி கிடந்தால் ஆலயம் உட்பகுதியில் பம்பு புத்துகள் அமைந்துள்ளது. இப்போது தீடீர் என்று ஆலத்தூர் தத்துவா சித்தர் கோவிலுக்கு சென்றுவந்ததால் அப்பகுதி மக்கள் கோவிலை சுற்றியுள்ள புதார் மரங்களை அழித்துள்ளனர். மிகப்பழமையான சித்தர்கோவில் கண்டுப்பிடித்ததால் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் பொதுமக்கள் சித்தர் ஆலையத்துக்கு சென்று சிறப்பு பூஜைசெய்து வருகின்றனர்.