பங்குனி பூஜைக்காக சபரிமலை நடை மார்ச் 14, 20ல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2018 11:03
சபரிமலை: சபரிமலை நடை வரும் 14 மற்றும் 20ம் தேதிகளில் திறக்கிறது. பங்குனி மாத பூஜைகள் மற்றும் உத்திர ஆராட்டு திருவிழா இந்த நாட்களில் நடக்கிறது. 14-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றுவார். அன்று வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
15-ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகங்கள் நடத்தி, நெய்யபிஷேகத்தை ஆரம்பித்து வைப்பார். 19-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் அதிகாலை 5:15 முதல் மதியம் 12:00 வரை நெய்அபிஷேகம் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் உதய அஸ்தமனபூஜை, சகஸ்ரகலசம், களபாபிஷேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். பங்குனி மாத பூஜை முடிந்து 19 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக 20-ம் தேதி மாலை 5 :00மணி மீண்டும் நடை திறக்கும். தொடர்ந்து கொடியேற்றத்துக்கான சுத்திகலச பூஜைகள் நடைபெறும். 21- காலையில் கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்கும். ஒன்பது நாட்களும் வழக்கமான பூஜைகளுடன் உற்ஸவபலி, ஸ்ரீபூதபலி போன்ற நிகழ்ச்சிகளுக்கு பின்னர் 30-ம் தேதி பம்பையில் ஆராட்டு நடைபெறும். அன்று இரவு திருக்கொடி இறக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.