பதிவு செய்த நாள்
07
மார்
2018
12:03
ஆட்டையாம்பட்டி: காளியம்மன் கோவில் மாசித்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஆட்டையாம்பட்டி, காளியம்மன் கோவிலில், மாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபி?ஷகம் செய்தனர். தீர்த்தக்குட ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை, 8:00 மணி முதல், மதியம் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டும், கோவிலை சுற்றி பொங்கல் வைத்தும் வழிபட்டனர். சிலர், மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவையொட்டி, மூலவர் காளியம்மனுக்கு பல வண்ண மலர் மாலைகள், எலுமிச்சம் பழம் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்து. கோவில் நிர்வாகிகள் கூறுகையில், பழமையான கோவிலை இடித்து விட்டு, பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்ட, 80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் நிறைவடைந்து, கும்பாபி?ஷகம் நடக்கவுள்ளது என்றனர்.