வைத்தீஸ்வரன் கோயிலில் பிரசாதமாக அளிக்கப்படுவது, திருச்சாந்து உருண்டை. இது பலவிதமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. வளர்பிறை நாட்களில் இங்குள்ள அங்க சந்தான தீர்த்தத்தில் நீராடி தீர்த்தக் கரையிலிருந்து மண் எடுத்து வருவர். இத்துடன் ஜடாயு குண்ட விபூதி. சித்தாமிர்த தீர்த்த நீர் ஆகியவற்றைக் கலந்து பஞ்சாட்சரம் உச்சாடனம் செய்தபடி பிசைவார்கள். பிறகு இந்தக் கலவையை முத்துகுமாரசுவாமி சன்னதியிலுள்ள குழி அம்மியில் போட்டு அரைத்து சிறுசிறு உருண்டையாகப் பிடித்து வைப்பர். இங்குள்ள தையல் நாயகியின் திருவடிகளில் சமர்ப்பித்து தரப்படும் இப்பிரசாதத்தை சித்தாமிர்த தீர்த்தத்தில் கலந்து சாப்பிட எல்லா பிணிகளும் அகலும்.