காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பேர் கண்டிகையிலுள்ள தான்தோன்றீஸ்வரர் கோயிலில் துர்க்கை அம்மன் மான் வாகனத்துடன் அபூர்வ காட்சி தருகிறார். அம்பிகை வில் உருவம் கொண்டு இறைவனை வழிபடுவது போன்ற உற்சவ விக்ரகம் உள்ள திருத்தலம், திருமால்பேறு. சோட்டானிக்கரை பகவதி அம்மன் வலது கரத்துக்குப் பதில் இடது கரத்தினால் அபயமுத்திரை காட்டுகிறாள். சிதம்பரம் நகரின் எல்லையில் அருளும் தில்லைக் காளி, பிரம்ம சாமுண்டியாக நான்கு முகங்களுடன் தரிசனம் தருகிறாள்.