சிவனின் இச்சா, கிரியா, ஞான சக்திகளின் வடிவமாய்த் தோன்றியது வில்வம். அதன் மூன்று இதழ்களும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இறைவனின் முக்குணங்களையும் இவை குறிக்கின்றன. நாள்தோறும் ஒரு வில்வத்தால் சிவனுக்கு பூஜை செய்து தரிசித்தால் ஏ÷ழுழு ஜன்மப்பாவம் விலகும். எல்லா வகை சித்திகளையும், நன்மைகளையும் அடையலாம் என்கின்றன புராணங்கள்.