ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது. காட்டழகப்பெருமாள் கோயில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேதராக சுந்தராஜபெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த மலையில் உள்ள சிலம்பு ஊற்று என்னும் தீர்த்தம், நாவல் மரப்பொந்தில் இருந்து வருவதும், கோயிலக்குப் பின்புறம் உள்ள மலை, பள்ளிகொண்ட பெருமாளின் தோற்றத்தைப் போன்று காணப்படுவதும் சிறப்புக்குரியதாகக் கூறப்படுகிறது.