திருச்சிக்குக் கிழக்கே துவாக்குடி என்ற ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருநெடுங்களநாதர் கோயில். இத்தலத்து இறைவன் சுந்தரேஸ்வரர்; இறைவி ஒப்பிலா நாயகி. இந்த கோயிலில் கருவறையின் மீது ஒரு விமானமும் உள்ளது. அர்த்த மண்டபத்தின் மீது இன்னொரு விமானமும் உள்ளது. காசியில் உள்ளது போல் இங்கு இரண்டு விமானங்கள் காட்சி தருவதால் இந்த கோயிலை ‘தட்சிண காசி’ என்கிறார்கள்.