விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் நகரிலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் அமைந்த அழகிய கிராமம், தென்பொன்பரப்பி, இங்குள்ள சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் சுமார் ஐந்தரை அடி உயரத்திற்கு விஷ்ணு மற்றும் பிரம்மா அமைந்த பீடங்களின் மீது ஷோடச லிங்கமாக அருள்பாலிக்கிறார் இறைவன். இவரை வழிபட்டால் மும்மூர்த்திகளின் அருளும் ஒருசேரக் கிடைக்குமாம்.