மங்கள சின்னங்களில் ஒன்று ஸ்வஸ்திக். செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்காக செல்லும் கோடுகள் இதில் இருக்கும். விநாயகரின் சின்னமாக விளங்கும் இதை பூஜைஅறையிலும், வாசலிலும் கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள், குங்குமம் கொண்டு இதை வரைவர். "ஸ்வஸ்தி என்றால் "தடையற்ற நல்வாழ்வு. ஸ்வஸ்திக்கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும். நாம் தொடங்கும் செயலுக்கு எட்டுத்திசைகளிலும் இருந்து எவ்வித தீங்கும் நேராமல் தடுப்பதோடு, அது நிறைவேறவும் துணை நிற்கும் என்பது இதன் தத்துவம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாக சொல்வதுண்டு.