பதிவு செய்த நாள்
12
மார்
2018
10:03
திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று காலை 8:15 மணிக்கு, மாரியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்கியது.
தேவஸ்தான பூச்சொரிதல் விழாவில், ஊர் பிரமுகர்கள், கோவில் பணியாளர்கள், பல்வேறு விதமான பூக்களை சுமந்து, ஊர்வலமாக சென்று அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமைகளில், சுற்றுப்புற மாவட்ட மக்கள், அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவர். விழா நாட்களில் சக்திக்கரகம் அழைத்தல், முளைப்பாரி ஊர்வலம், பால்குட ஊர்வலம், தீச்சட்டி ஏந்துதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தியும், பக்தர்கள் வழிபாடு நடத்துவர்.