உத்தரகோசமங்கை வாராகி கோயிலில் மார்ச் 25ல் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2018 11:03
கீழக்கரை: உத்தரகோசமங்கை வாராகி அம்மன் கோயிலில் திருப்பணி நிறைவு பெற்று, கடந்த பிப்., 5 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் முற்பகலில் அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில்காட்சி நடந்து வருகிறது. வரும் மார்ச்25 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் வாராகி அம்மன், மங்கைமா காளியம்மன் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு மண்டலாபிஷேகமும், 18 வகையான மூலிகை அபிஷேகமும், அன்னதானம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், கோயில் ஸ்தானிக அர்ச்சகர்கள்மற்றும் பவுர்ணமி விழாக்கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.