பதிவு செய்த நாள்
02
ஜன
2012
11:01
நகரி : காளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் இனிமேல் கேமரா, மொபைல் போன் உபயோகிக்க, கோவில் நிர்வாகம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரரை தரிசிக்க, தினமும் ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வருகின்றனர்.
தற்போது திருமலைக் கோவிலுக்குள் கேமரா, மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளதைப் போன்று, காளஹஸ்தி கோவிலிலும் இவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று, பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள், காளஹஸ்தி கோவில் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, ஜன., 1 முதல் காளஹஸ்தி கோவிலுக்குள் கேமரா, மொபைல் போன்களை பக்தர்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தீவிரமாக அமல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.