Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்)பிள்ளைகளால் பெருமை மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)குடும்பத்தில் குதூகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)குடும்பத்தில் குதூகலம்

பதிவு செய்த நாள்

13 மார்
2018
05:03

சத்திய வழியில் நடக்க விரும்பும் மீன ராசி அன்பர்களே!

கடந்த மாதம் போன்றே 11-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் நற்பலன் அதிகரிக்கும்.  உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் மார்ச் 27-ல்  இடம் மாறினாலும் மாதம் முழுவதும் சிறப்பான பலன் கொடுப்பார். 9-ம் இடத்தில் இருக்கும் குரு ஏப்ரல் 10-  வரை நன்மை தர வாய்ப்புண்டு. அதன் பிறகு அவர் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுவதால் அவரால் நற்பலன் கொடுக்க முடியாது.  கேதுவால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். குருவால் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.  சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.  ஆடம்பர  வசதிகள் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.   

புதனால் சில பிரச்னை வாழ்வில் குறுக்கிடலாம்.  சிலருக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சுக்கிரனால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.  சகோதர வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பெண்கள்  உறுதுணையாக இருப்பர். குறிப்பாக மார்ச் 18,19-ல் அவர்களால் நன்மை கிடைக்கும்.  மார்ச் 24,25-ல் உறவினர் வகையில் வீண்விரோதம் வரலாம். அதே நேரம் ஏப். 9,10-ல் உறவினர் வருகை இருக்கும்.  அவர்களால் நன்மை ஏற்படும்.  

சூரியனால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். செல்வாக்கு பாதிக்கப்படலாம்.  பயணத்தின் போது கவனம் தேவை. உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம்.  பெண்களுக்கு குடும்பத்தேவை குறைவின்றி நிறைவேறும். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சியில் அக்கறை கொள்வர்.    

வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். விண்ணப்பித்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மார்ச் 22,23-ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.  பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்க பெறலாம். மார்ச் 30,31, ஏப். 1-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். ஏப்.9க்கு பிறகு குரு பகவானால் மன வேதனை, நிலையற்ற தன்மை உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் லாபம் படிப்படியாக அதிகரிக்கும். செவ்வாயால் எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம்.  மார்ச் 26-க்கு பிறகு வியாபாரி களுக்கு அரசின் சலுகை கிடைக்கும். தொழில் விரிவாக்கத்திற்கான வங்கி கடன் எளிதாக கிடைக்கும். மார்ச் 28,29-ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.

பணியாளர்கள் வேலை பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்.  பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடலாம். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு இருக்கும். சற்று முயற்சி செய்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு திடீர் இட,பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.  மார்ச் 26-க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம்.  ஏப்.7,8- தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  சக பெண் கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  மார்ச் 26-க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.  அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சீரான பலன் காண்பர். புகழ், கவுரவத்திற்கு பங்கம் வராது.

மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.  பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோனையை ஏற்று நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும். விவசாயிகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  பயறு, பழ வகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு வருமானம் வரும்.

* நல்ல நாள்: -மார்ச் 18, 19, 22, 23, 28, 29, 30, 31, ஏப்.1, 7, 8, 9, 10
* கவன நாள்: ஏப்.2. 3  சந்திராஷ்டமம்-
* அதிர்ஷ்ட எண்-: 6, 7 நிறம்-:வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:-
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* திங்களன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar