Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)குடும்பத்தில் குதூகலம் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: ( கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குடும்பத்தில் குதூகலம் ரிஷபம்: ( கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்)பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:07

மற்றவருக்கு உதாரணமாக திகழும் மேஷ ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 7-ம் இடத்தில்   அமர்ந்து நன்மை தருவார். சுக்கிரன் ஏப்.21ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்.  செவ்வாய் மே 1ல், புதன் மே 4ல் இடம் மாறினாலும் அவர்களால் நன்மை உண்டாகாது. புதன் ராசிக்கு 12ல் இருப்பது சுமாரான நிலையே. சூரியனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். குருவால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பொருளாதார வளம் சேரும். முயற்சியில் வெற்றி உண்டாகும். மக்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். குடும்பத்தேவை பூர்த்தியாகும்.  ஏப்.16,17, மே14ல் பெண்களால் நன்மை ஏற்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.23.24ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். மே9,10ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் வகையில் இருந்த கருத்து வேறுபாடு முயற்சியில் தடை போன்றவை மே4க்கு பிறகு  மறையும்.

தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். மாத முற்பகுதியில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். ஏப்ரல்27,28ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஏப்.20க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். மே3க்கு பிறகு புதனால் பொருள் விரயம் ஏற்படலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். பணியாளர்களுக்கு அலைச்சல், வேலை பளு ஏற்படும். சுக்கிரனால் ஏப்.20க்கு  பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மே 3க்கு பிறகு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மே6,7,8 ஆகியவை  சிறப்பான நாட்களாக இருக்கும்.  

கலைஞர்களுக்கு சுக்கிரனால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏப். 20க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர்,  பொருளாதார வளம் பெறுவர்.  மாணவர்களுக்கு புதன் சாதகமற்று இருப்பதால் சக மாணவர் களிடம் விழிப்புடன் பழகவும். தேர்வுக்காக அக்கறையுடன் படிக்க வேண்டியதிருக்கும். இருப்பினும் குருபலத்தால் பின்னடைவு ஏற்படாது.  மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்க வாய்ப்புண்டு. விவசாயிகள் சோளம், மஞ்சள், கம்பு, கேழ்வரகு, பழ வகைகளில் நல்ல மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.

பெண்களுக்கு சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர். ஏப்.21,22ல்  முயற்சியில் வெற்றி உண்டாகும். ஆடை, அணிகலன் வாங்க யோகமுண்டு. ஏப்.29,30ல் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.  அதிர்ஷ்டவசமாக பணம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை அவசியம். முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். செவ்வாயால் மே1க்கு பிறகு அண்டை வீட்டாரின் தொல்லை ஏற்படலாம் கவனம். உடல் நலம் பாதிக்கப்படலாம்.செவ்வாயால் மே1க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது  சற்று கவனம் தேவை.

* நல்ல நாள்: ஏப். 16, 17, 21, 22, 27, 28, 29,30 மே 6, 7, 8, 9, 10, 14
* கவன நாள்: மே 1, 2, 3 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட  எண்: 3,5  நிறம்:மஞ்சள்,வெள்ளை

* பரிகாரம்:
* செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அர்ச்சனை
* தினமும் காலையில் நீராடி சூரியநமஸ்காரம்
* புதனன்று ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம்

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை) »
temple
பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் ... மேலும்
 
temple
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ... மேலும்
 
temple
திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் ... மேலும்
 
temple
கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான ... மேலும்
 
temple
மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.