பதிவு செய்த நாள்
02
ஜன
2012
11:01
தூத்துக்குடி: ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணம் முத்தாரம்மனுக்கு, 1,008 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.காமதேனு வழிபாட்டு மன்றம் சார்பில், உலக நன்மைக்காக இந்த வழிபாடு நடந்தது. இங்குள்ள அறம் வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் இருந்து, 1,008 பால்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்ட பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக முத்தாரம்மன் கோயிலைச் சேர்ந்தனர். இதன்பின், முத்தாரம்மனுக்கு, அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர். இதுபோல, திருச்செந்தூர் முருகன் கோயிலிலும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.