பதிவு செய்த நாள்
02
ஜன
2012
12:01
புரி, ஜன. 2
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், புரி ஜகன்னாதர் கோவிலில் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றார்.
புத்தாண்டையொட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், புகழ்பெற்ற புரி ஜெகன்னாதர் கோவிலுக்கு நேற்று சென்றார். சிங்க நுழைவாயில் வழியாக கோவிலுக்குள் சென்ற நவீன் பட்நாயக், 22 படிக்கட்டுகளுடன் கூடிய மூலவரை தரிசிக்கச் சென்றார். ஏழு படிக்கட்டுகள் ஏறியதும் அவரை அமைச்சர்களும், தொண்டர்களும் சூழ்ந்து கொண்டனர்.
உடனடியாக, மாவட்ட போலீஸ் அதிகாரி அழைக்கப்பட்டார். அவர் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினார். எனினும், முதல்வர் நவீன் பட்நாயக் ஏழாவது படிக்கட்டில் இருந்தபடியே மூலஸ்தானத்தை நோக்கி வணங்கி விட்டு, கோவிலை விட்டு கிளம்பிச் சென்றார்.
கோவிலுக்கு வந்து விட்டு, எதற்கு மூலவரை தரிசிக்காமல் சென்றார் என்பதற்கு, பலரும் பதில் சொல்லவில்லை. கோவில் நிர்வாகிகள் குறிப்பிடுகையில், "நவீனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன், காலில் காயம் ஏற்பட்டது. அதன் பின், அவர் கைத்தடியுடன் தான் நடக்கிறார். கோவில் படிக்கட்டில் அவரால் கைத்தடி இல்லாமல் ஏறமுடியவில்லை. மிகவும் சிரமப்பட்டார். அதனால், அவர் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி விட்டார் என்றனர்.