பதிவு செய்த நாள்
15
மார்
2018
12:03
சிங்கபெருமாள்கோவில்: சிங்கபெருமாள்கோவில் பகுதியில், கோவில் நிலங்களை, நிலம் அளவிடு செய்யும் குழுவினர், அளவிடு செய்தனர். தமிழகம் முழுவதும், திருக்கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, திருக்கோவில் நிலங்களை மீட்கவும், இந்த நிலங்களை அளவீடு செய்ய, இந்து சமய அறநிலைத் துறை செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஓய்வுபெற்ற நில அளவையர் ஆகியோர் கொண்ட குழுவினர், நிலங்களை அளவீடு செய்ய வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சிங்கபெருமாள்கோவில், நரசிம்மபெருமாள் கோவில், செட்டிப்புண்ணியம் தேவநாதபெருமாள் ஆகிய, கோவில்களின் நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வுபெற்ற நில அளவையர் நேற்று, கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்தனர். அதன் பின், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த அறிக்கையை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு, நிர்வாக அதிகாரி அனுப்பினர்.