பெரியகுளம்:பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசியை முன்னிட்டு, கிருஷ்ணர், ராதைக்கு பால்,தயிர், பன்னீர், இளநீர், தேன் சந்தனம், மஞ்சள் மற்றும் மங்கல திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. கிருஷ்ணர்- ராதை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து நடந்த ஆன்மிக சொற்பொழிவில் கிருஷ்ணசைதன்யதாஸ் பேசுகையில்:ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேஎன்ற மகாமந்திரத்தை நாளும் பிரார்த்தனை செய்து, எல்லாவிதமான நன்மைகளை பெறலாம் ,என்றார். மழை, நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.