பதிவு செய்த நாள்
19
மார்
2018
02:03
திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே, கோவில் இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப் பட்டுள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துஉள்ளனர். திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே, பண்டுதக்குடியில், வாஸலாம்பிகா சமேத உமாபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக விவசாய நிலங்களும், காலி மனைகளும் உள்ளன. இவற்றை, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர், பராமரித்து வருகிறார். இந்நிலையில், பண்டு தக்குடியில், விவசாய நிலங்களுக்கு மத்தியில், ஒன்பது மாதங்களுக்கு முன், புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இக்கடை இருக்கும் இடம், உமாபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என, தெரியவந்துள்ளது. கிராமத்தைவிட்டு, 2 கி.மீ., தூரத்தில், டாஸ்மாக் கடை இருந்தாலும், கோவில் இடத்தில் கடை திறக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.