பதிவு செய்த நாள்
20
மார்
2018
12:03
ஆர்.கே.பேட்டை: சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், வரும், 30ம் தேதி, பங்குனி உத்திரத்தை ஒட்டி, திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை, பிராமணர் வீதியில் அமைந்துள்ளது சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில், இந்த கோவில், 1987ல் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த 2005 முதல், பங்குனி உத்திர திருவிழாவும் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில், வரும் 30ம் தேதி, பங்குனி 16ம் நாள், உத்திரத்தை ஒட்டி, சிறப்பு திருமஞ்சனமும், திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. அன்று, காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதை தொடர்ந்து, அன்று, மாலை, 4:00 மணிக்கு, சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். பின், சுவாமி உள்புறப்பாடு எழுந்தருளுகிறார்.