கொடுமுடி: ஊஞ்சலூர் மாரியம்மன் கோவிலில், பூத்தட்டு நிகழ்வை அடுத்து, கொடியேற்றம் நேற்று நடந்தது. முன்னதாக கோவிலில் கடந்த, 13ல் பூச்சாட்டுடன் விழா தொடங்கியது. அதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. விழா, ஆறாம் நாளான நேற்று முன்தினம் பூச்சொரிதல், நேற்று கொடியேற்றம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.