பதிவு செய்த நாள்
20
மார்
2018
01:03
ராசிபுரம்: பட்டணம், செல்லாண்டியம்மன் கோவில் பொங்கல் விழா, வரும், 23ல் நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, பட்டணத்தில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. பங்குனி முதல் வாரத்தில், பொங்கல் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, வரும், 22ல் துவங்குகிறது. இரவு, 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், அன்னதானம், 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜை நடக்கிறது. மறுநாள் காலை, 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், 9:00 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.