பதிவு செய்த நாள்
21
மார்
2018
01:03
திருவள்ளூர்: திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 25ம் தேதி, ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இன்று, மற்றும் நாளை, காலை, 9:00 மணிக்கு, மூலவர் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் நடைபெறும் திருமஞ்சனம், காலை 11:00 மணிக்கு நிறைவடைந்து, மகா தீபாராதனை நடைபெறும். ராமநவமி விழாவை முன்னிட்டு, வரும், 24ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், 25ம் தேதி ராமநவமி அன்று, காலை, 8:00 மணிக்கு, அனுமன் சாலிசா பாராயணமும் நடைபெறுகிறது.