பதிவு செய்த நாள்
21
மார்
2018
01:03
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவ விழா, நேற்று துவங்கியது. செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வர் கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆறாம் ஆண்டு, பங்குனி உத்திர பெருவிழாவை ஒட்டி, பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இவ்விழா, விநாயகர் உற்சவத்துடன் துவங்கி, ஏப்., 1 வரை நடக்கிறது. விழாக்காலங்களில், தினமும் காலை மற்றும் மாலைகளில், சுவாமி வீதியுலா நடைபெறும்.