திருத்தணி: சக்தி அம்மன் எல்லைக்கற்கள் பிரதிஷ்டை விழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நேற்று -நடந்தது. திருத்தணி அடுத்த, அகூர் கிராமத்தில், சக்தி அம்மன் எட்டு திசை எல்லைக்கற்கள் பிரதிஷ்டை விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, பூ கரகம் மற்றும் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்தவாறு பம்பை, சிலம்பாட்டத்துடன் கிராம வீதிகளில் ஊர்வலம் சென்றனர். பின், சக்தி அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில், அகூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் வழிபட்டனர்.