பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2018 02:03
பேரூர் : கோவை, பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
பட்டீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா கோலாகலமாக துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு, 8:00 மணிக்கு மலர் பல்லக்கு அதிமூர்க்கம்மன் திருவீதியுலா நடக்கிறது. 27ம் தேதி மாலை, 4:35 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 28ம் தேதி இரவு, 8:00 மணிக்கு வேடுபரி உற்சவம், குதிரை வாகனம், கிளி வாகனம் திருவீதியுலா, 30ம் தேதி, அதிகாலை, 3:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் ஸ்ரீநடராஜர் பெருமான் மகா அபிேஷகம், தரிசன காட்சி, மகா தீபாராதனை, திருவீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.