பதிவு செய்த நாள்
24
மார்
2018
02:03
சேலம்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், சேலம், இஸ்கான் சார்பில், கருப்பூரிலுள்ள இஸ்கான் கோவில் வளாகத்தில், நாளை, ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ளது. மாலை, 6:30 மணிக்கு பஜனை, 7:00 மணிக்கு குருகுல மாணவர்களின் மங்களாசரணம் நடக்கவுள்ளது. தொடர்ந்து, அபிஷேகம், ராம லீலா எனும் தலைப்பில் உபன்யாசம் நடக்கும். இரவு, 8:45 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். மக்கள் பலர் பங்கேற்று, ராமரின் கருணையைப் பெறுமாறு, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.