உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2018 04:03
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் சன்னதி அருகே அமைந்துள்ள ஷேத்திர காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பகல் 11 :00 மணியளவில் மூலவருக்கு 11 வகையான மூலிகை அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்டார்.தோஷ நிவர்த்திக்காகவும், உலகநன்மைக்காகவும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. பூஜைகளை கோயில் குருக்கள் நாகநாதன் செய்திருந்தார்.