ராமநாதபுரம் : ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் ராம நவமி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடந்தது.ராமநவமி தினத்தை முன்னிட்டு கோதண்டராமர் கோயிலில் காலை 6:00 மணிக்கு அகண்ட ராம நாம ஜெபம் நடந்தது.காலை 9:00 மணிக்கு உற்ஸவர், மூலவருக்கு விசஷே திருமஞ்சனம் நடந்தது.மாலை 6:00 மணியளவில் ராமாயணம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து விதை தானமாக நெல், நீர் மோர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின் பெருமாள் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.