உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பேரையூர் ரோட்டில் செட்டிச்சியம்மன் கோயில் உள்ளது. மார்ச் 24 முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று நான்காம்கால யாகசாலை பூஜைக்குப்பின் புத்துார் முருகன் கோயில் அர்ச்சகர் ராம்குமார் தலைமையிலான குழு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அன்னதானமும்நடந்தது. ஏற்பாடுகளை பூஜாரி மனோகரன் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.