திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதிஅம்மன் கோயிலில் ஏப்ரல் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கடந்த நவம்பர் 30ல் பாலாலயம் மேற்கொள்ளப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை அமைக்க, முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. முன்னதாக கோயில் யானை மற்றும் முகூர்த்தக்கால் கோயிலை சுற்றி வந்தது.