பதிவு செய்த நாள்
28
மார்
2018
12:03
சேலம்: சேலம், வின்சென்ட், எல்லைப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா, நேற்றிரவு பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. இதில், திரளாக பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். ஏப்., 3 இரவு, மா விளக்கு ஊர்வலம், 4ல் பொங்கல் வைபவம், 5ல் அக்னி குண்டம், 6 காலை, பால்குட ஊர்வலம், மாலை, வண்டி வேடிக்கை நடக்கிறது. 7 இரவு சத்தாபரணம், ஏப்., 8ல் மஞ்சள் நீராட்டம் ஆகியவை நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்துள்ளனர்.