பதிவு செய்த நாள்
31
மார்
2018
02:03
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அரோ கர கோஷத்துடன் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடந்தது.பக்தர்கள் காவடி சுமந்தும் , பால், பன்னீர், இளநீர், பறவைக்காவடி எடுத்தனர்.
மேலும் பக்தர்கள் கொடுமுடி மற்றும் பல்வேறு புனித தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தாண்டிக்குடி, கானல்காடு, மங்களம் கொம்பு, கொடலங்காடு, ஆடலூர், பன்றிமலை பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பாலமுருகனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் மற்றும் வாகனம் நிறுத்தம், பக்தர்கள் தரிசனத்திற்கு இடையூ ரின்றி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின்பு மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
பண்ணைக்காடு முருகன் கோயிலிலும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடந்தது.
சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.சுவாமிக்கு பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், இளநீர், தயிர், விபூதி, தேன், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள்நடந்தது. ராஜ
அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதன நடந்தது.
பகல் முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அழகுலிங்கம் மற்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர் கணபதிமுருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
* சின்னாளபட்டி:- பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயி லில், சிறப்பு பூஜைகள் நடந்தது. விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து, வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியசுவாமி, சதுர்முக முருகனுக்கு பால், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர் தம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், கசவ னம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், குட்டத்துப்பட்டி ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், பித்தளை ப்பட்டி அண்ணாமலையார் கோயிலில், பங்குனி உத்திர சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
* ஒட்டன்சத்திரம்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
குழந்தை வேலப்பருக்கு பால், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் அபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் முருகனை வழிபட்டனர்.