பதிவு செய்த நாள்
31
மார்
2018
02:03
பழநி: தமிழ்நாடு இந்துஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில், ஆறுபடைவீடு களுக்கு சென்ற வேல்சங்கமம் ரதயாத்திரை நேற்று(மார்ச் 30)ல் பழநியில் முடிவடைந்தது.
வேல்சங்கம விழாவை முன்னிட்டு, பழநியில் மார்ச் 19ல் குமரவேல், வீரவேல், மருதவேல், ஞானவேல், தணிகைவேல், சோலைவேல் ஆகிய ஆறு வெள்ளிவேல்களை வைத்து, சிறப்புபூஜைகள் நடந்தது.
மார்ச் 24ல் பங்குனிஉத்திரவிழா துவக்கம்அன்று, அடிவாரம் பாதவிநாயகர்கோயிலில் இருந்து வேல்சங்கமம் ரதயாத்திரை துவங்கியது.
ஒவ்வொரு வேல்களும் ஆறுபடை வீடுகளுக்கு புறப்பட்டுசென்றது. பழநிக்குரிய வேல் மருத மலையில் இருந்து புறப்பட்டது. அனைத்துபகுதிகளில் பக்தர்கள் வழிபட்டனர். இறுதியாக நேற்று மாலை ஆறுவெள்ளிவேல், பக்தர்கள் வழங்கிய வேல்களும் பழநிக்கு வந்தது. அவைகள் பழநி திருஆவினன்குடியில் முருகருக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது.
பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரசுப்ரமணி யன், ஆர்.எஸ்.எஸ்., தென்மாநில தலைவர் ஆர்.வி.எஸ்., மாரிமுத்து, மதுரை கோட்ட தலைவர் ராமகிருஷ் ணன், பா.ஜ., விஸ்வஇந்துபரிசத், இந்துமுன்ணனி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற் றனர்.