பதிவு செய்த நாள்
31
மார்
2018
05:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், 10ம் நாள் உற்சவமான நேற்று (மார்ச் 30)ல் காலை, சபாநாதர் தரிசனத்தில், சிவகாமி அம்மையுடன், நடராஜர் வீதியுலா வந்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவின், 10ம் நாள் உற்சவமான நேற்று (மார்ச் 30)ல் காலை, சபாநாதர் தரிசனம் நடந்தது.
இதில், பேண்டு வாத்திய கலைஞர்கள் இசைக்கருவியை வாசித்தபடி செல்ல, சிவகாமி அம்மையுடன், நடராஜபெருமான், நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார்.
மேற்கு ராஜ வீதியில் உள்ள காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டை, செட்டித்தெரு வைசிய குல மளிகை வகுப்பு, பேரி செட்டியார்களுக்கு சொந்தமான சத்திர மண்டபம் சங்கம் அருகில், சுவாமி வந்த போது, மண்டகபடி நடந்தது.
சுவாமிக்கு மாலை மாற்றப்பட்டு, தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட் டது.மாலையில், ஏலவார்குழலியம்மை ஓ.பி.குளத்திற்கு எழுந்தருளி, வீதியுலா மண்டகப்படி நடந்தது.