பழநி: பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு , பழநி முருகன்கோயிலுக்கு பறவை,மயில், மலர், தீர்த்த காவடிகள் எடுத்தும், கரகாட்டம், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.
பங்குனி உத்திரதிருவிழா மார்ச் 24 முதல் ஏப்.,2 வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடியுடன் பழநிக்கு பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். அவர்கள் அலகு குத்தியும், மயில் காவடிகள், எடுத்து கிரிவீதியை வலம் வந்து மலைக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நேற்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர். ஒரு பக்தர் உடல்முழுவதும் அலகு குத்தி டூவீலரில் கிரிவலம் வந்தார். நேற்று கூட்டம் அதிகரித்ததால் வின்ச், ரோப்கார் ஸ்டேஷனில் 2மணிநேரமும் , மலைக்கோயிலில் 3 மணிநேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.