பதிவு செய்த நாள்
02
ஏப்
2018
01:04
உடுமலை;பங்குனி உத்திரத்தையொட்டி, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பாதயாத்திரையாக பழநிக்கு சென்று வருகின்றனர். உத்திர திருவிழா முடிந்தாலும், பாதயாத்திரையை மக்கள் தொடர்ந்து வருகின்றனர்.இவர்களில் பலர், நடப்பதற்கு தேசிய நெடுஞ்சாலையை தேர்ந்தெடுக்கின்றனர். பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாய் இருப்பதால், இந்நேரத்தை ஓய்வாக மாற்றி, மாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் நடந்து செல்கின்றனர். இவ்வாறு, நெடுஞ்சாலையோரம் செல்லும் பக்தர்களை, அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் அச்சுறுத்தி வருகின்றன. அதேசமயம், பக்தர்களின் நள்ளிரவு நேர பயணம், தொலை துாரத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் டிரைவர்களுக்கு சவாலாகவே இருந்து வருகிறது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி, மித வேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுவதால், குறித்த நேரத்தில், குறிப்பிட்ட பகுதியை சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்து ஏற்படும் நிலை உருவாகுவதாகவும், டிரைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.