பேரையூர்; பேரையூர் முருகன் கோயில் மொட்டமலை ஊற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கும். கோயிலில் இதை புனிதநீராக பயன்படுத்துவர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் இந்நீரை பாட்டில்களில் அடைத்து எடுத்து செல்வர். சில மாதங்களாக தீர்த்தத்தொட்டியில் நீர் சுரப்பு சிறிது சிறிதாக குறைந்து தற்போது முற்றிலும் வற்றி விட்டது. இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.