பதிவு செய்த நாள்
03
ஏப்
2018
12:04
பர்கூர்: பர்கூரில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கல்யாணமுருகனுக்கு, திருக்கல்யாணம் நடந்தது. பர்கூர் அடுத்த, சிகரலப்பள்ளி திருச்செங்குன்றம் கல்யாண முருகர் கோவிலில், 65வது ஆண்டு, பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதையொட்டி, மார்ச், 29ல், தபால்மேடு விநாயகர் கோவிலில், அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜைகளும், 30ல் கல்யாண முருகர் கோவிலில், சிறப்பு அபி?ஷக ஆராதனை மற்றும் பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து, ஏப். 1ல் சிறப்பு பூஜைகளும், இரவு வாணவேடிக்கையும் நடந்தது. நேற்று, யாகம் வளர்த்து, கல்யாணமுருகனுக்கு, வள்ளி, தெய்வானையுடன், திருக்கல்யாணம் நடந்தது. வள்ளி தெய்வானையுடன், கல்யாணமுருகன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.