பதிவு செய்த நாள்
03
ஏப்
2018
12:04
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை ராகவேந்திரர் கோவிலில், ராமருக்கு பட்டாபி?ஷகம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரர் கோவிலில், ராமஜெனன மஹோத்ஸவ விழா, மார்ச், 24ல் துவங்கியது. ஏப்., 1ல், 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. நேற்று பகல், 12:00 மணிக்கு, ராமருக்கு பட்டாபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, 12:30 மணிக்கு, மங்கள ஆரத்தி நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, 6:00 மணிக்கு, சுவாமி நகர்வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, சயன உற்சவமும், நாளை, வசந்த உற்சவமும், 5ல் ஊஞ்சல் உற்சவமும், 6ல் ராகவேந்திரர் உற்சவமும் நடக்கிறது.