பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
02:04
குளித்தலை: காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, எருமை கிடா பலியிட்டு வழிபட்டனர். குளித்தலை அடுத்த கள்ளையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காளியம்மன், பகவதி அம்மன், கருப்பசாமி கோவில் தேர்த் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் காளியம்மன் கோவிலில், பூப்போடுதல், கரகம்பாலித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, கருப்பசாமி குட்டி குடித்தல், தேவராட்டம், காரகாட்டம் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேரிழுத்தனர். திருத்தேர் காளியம்மன் கோவிலைசுற்றி வலம் வந்தது. முத்துப் பள்ளக்கு, குதிரை வாகனம் கோவில் வளாகம் வந்தபின், 50க்கும் மேற்பட்ட எருமைக் கிடாய்கள் வெட்டி பலியிடப்பட்டன. தேர்திருவிழாவில் வானவேடிக்கையும் நடந்தது. மாலையில் மஞ்சள் நீராட்டம், கரகம் எடுத்து விடுதல் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.