பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
02:04
குளித்தலை: குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். குளித்தலை பஸ் ஸ்டாண்ட் வாளகத்தில் உள்ள பேராளகுந்தாளம், எல்லைப் பிடாரி அம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த மார்ச், 28ல் காப்பு கட்டி தொடங்கியது. ஏப்., 1ல், பூத்தட்டு விழா நடந்தது. நேற்று காலை, 10:00 மணியளவில், கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பால் குடம், தீர்த்தக் குடம்த்துடன், காவடி எடுத்து, அக்னிச் சட்டி ஏந்தி, அலகு குத்திக் கொண்டு, பக்தர்கள் பலவிதமாக நேர்த்திக் கடன் செலுத்தினர். முக்கிய வீதி வழியாக ஊர்வலம் சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. தினந்தோறும் அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும். வரும், 7ல் சாமி குடிபுகுதல் நடக்கிறது.