பழநி, பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரவிழா முடிந்தபின்னரும் ஏராளமான பக்தர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடிகளுடன் பாதயாத்திரையாக பழநிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வடக்கு கிரிவீதி, பாதவிநாயகர் கோயில் அருகே ஒன்றுகூடுவர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் பக்தர்கள் வசதிக்காக வடக்குகிரிவீதி பாதவிநாயகர் கோயில் முதல் குடமுழுக்கு அரங்கம் வரை தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பாதவிநாயகர் கோயில் அருகே அத்துமீறி வாகனங்கள் செல்லமுடியாத வகையில் தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.