பதிவு செய்த நாள்
13
ஏப்
2018
03:04
கடையநல்லூர்: சித்திரை மாதம் 6ம் தேதி (19/04/2018) வியாழக்கிழமை முதல் சித்திரை 15ம் தேதி (28/04/2018) சனிக்கிழமை முடிய ஸ்ரீநீலமணிநாத ஸ்வாமிக்கு ப்ரம்ஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற விருக்கிறது.
நிகழ்ச்சி நிரல்:
19/04/2018 - வியாழன் - காலை த்வஜா ரோஹணம் (கொடியேற்று) காலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள். இரவு சமர பூ பாரம்
20/04/2018 - வெள்ளி - ஸிம்ஹ வாஹனம்
21/04/2018 - சனி - சிறிய திருவடி ஹனுமார் வாஹனம்
22/04/2018 - ஞாயிறு - சேஷ வாஹனம் (நாகம்)
23/04/2018 - திங்கள் - பெரிய திருவடி கருட வாஹனம்
24/04/2018 - செவ்வாய் - யானை வாஹனம்
25/04/2018 - புதன் - மாலை 4.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம்,: பூம்பல்லக்கு, ரத வீதி பஜன். இரவு: அன்ன வாஹனம்
26/04/2018 - வியாழன் - குதிரை வாஹனம்
27/04/2018 - வெள்ளி - பெரிய திருவடி கருட வாஹனம்
28/04/2018 - சனி - ரதோத்ஸவம். மாலை 5.30 க்கு மேல் பஜனையுடன் தேரிலிருந்து ஸ்வாமி கோவிலுக்கு எழுந்தருளல். முத்துப்பல்லாக்கு
29/04/2018 - ஞாயிறு - காலை அபிஷேகம்: இரவு: பூர்ணாகுதி, ஸ்வாமி புறப்பாடு மங்களாக்ஷதை, தீபாராதனை, கொடி இறக்கம்
30/04/2018 - திங்கள் - காலை: அபிஷேகம்: அலங்காரம், தீபாராதனை, ஸ்ரீநீலமணிநாதர்/ ஸ்ரீநிவாச கல்யாணம் (சம்ப்ரதாய பஜனை) இரவு: ஸ்ரீநீலமணி நாதர் ஸ்வாமி,
ஸ்ரீனிவாசப்பெருமாள் கருடவாஹனத்தில் புறப்பாடு
ப்ரம் ஹோத்ஸவ விஷேச தினங்களும் நேரங்களும்
16/04/2018- திங்கள்- காலை 5.00 -6.00 மணிக்குள் கொட்டகைக்கால் நாட்டு (சித்திரை மாதம் 3ம் தேதி அஸ்வதி நக்ஷ்த்திரம்
18.04.2018- புதன் -மாலை 6.00 -7.00 மணிக்குள் மிருத்ஸங்கரணம், செல்லப்பிள்ளை ஸ்வாமி புறப்பாடு
25.04.2018 -புதன் - காலை 9.00 - 10.00 மணிக்குள் தேர்க்கால் நாட்டு
27.04.2018 -வெள்ளி - காலை சிறப்பு அபிஷேகம், கும்ப ஜபம்
28.04.2018 - சனி - காலை 7.30 -8.00 மணிக்குள் (ஹஸ்தம்) ஸ்ரீநீலமணி நாதஸ்வாமி தேருக்கு எழுந்தருளல்
19.4.18 அன்று உடையவர் ஸ்ரீமத் பகவத் ராமானுஜரின் 1001 வது திரு அவதார ஜெயந்தியை முன்னிட்டு நம் பெருமாளின் திருவுள்ளப்படி வேத, பாகவத பாராயணத்துடன் 4000 திவ்யப்ரபந்த பாராயணமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.