Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)  நன்மை மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அரசு வகையில் நன்மை
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அரசு வகையில் நன்மை

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:04

பணிவால் வாழ்வில் உயர்ந்து விளங்கும் மீன ராசி அன்பர்களே!

கடந்த மாதம் போல நற்பலன் கிடைக்கப் பெறுவீர்கள். ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கும் கேது தொடர்ந்து நன்மை கொடுப்பார். இந்த மாதம் செவ்வாய் மே1ல் இருந்து சாதகமான இடமான மகரத்திற்கு வருகிறார்.  சுக்கிரன் ஏப்.21ல் இடம் மாறினாலும். முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  சுக்கிரனால் செல்வாக்கு மேம்படும். தேவை  அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதிகள் பெருகும். ஏப்.20க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். மே 1க்கு பிறகு புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.  ஏப்.14,15,மே11,12, 13ல் பெண்கள்  உறுதுணையாக செயல்படுவர். அவர்களால்  பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். ஏப்.21,22ல் உறவினர் வகையில் வீண் விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதே நேரம்  மே 6,7,8ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும்.

புதனால் ஏற்பட்ட மனக்குழப்பம், பொருள் இழப்பு  போன்றவை மே3க்கு பிறகு மறையும். அதன் பிறகு குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.  தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். விண்ணப்பித்த வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஏப்.16,17,  மே 9,10,14ல் சந்திரனால் சிறுதடைகள் வரலாம். ஏப்.25,26ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். சனீஸ்வரரால் பெண்கள் வகையில் இடையூறு வரலாம். ஆனால், கேதுவால் அதை முறியடிக்கும் வலிமை பெறுவீர்கள். மே1 க்கு பிறகு பங்கு வர்த்தகத்தில் அதிக வருவாய் கிடைக்கப் பெறலாம். பணியாளர்களுக்கு சுக்கிரனால் நிர்வாகத்திடம் நற்பெயர் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். ஏப்.20க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை மே 1க்கு பிறகு வைக்கலாம். மே 4,5 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் வேலைப்பளுவால் சிரமப்பட வேண்டியதிருக்கும். இடமாற்ற பீதி மே3க்கு பிறகு மறையும். கலைஞர்கள், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதியஒப்பந்தங் களில் கையெழுத்திடுவர்.  எதிர்பார்த்த வருமானம் இருக்கும்.அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள்,  சமூக நல சேவகர்கள் நற்புகழ்பெறுவர்.  அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டியது இருக்கும். குருவின் 7-ம் இடத்துப்பார்வையால் ஆசிரியர்களின்  ஆலோசனை கிடைக்கும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.    

விவசாயிகளுக்கு கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மே 1க்கு பிறகு கைகூடும். அதன் பின் வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவனின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஏப்.18,19,20ல் ஆடை, அணிகலன்கள் சேர வாய்ப்புண்டு. ஏப்.27,28ல் விருந்து, விழா என சென்று வர வாய்ப்புண்டு.  செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ணம், தோல் தொடர்பான நோய், பயண பீதி முதலியன மே 1க்கு பிறகு மறையும்.

* நல்ல நாள்: ஏப்.14,15,18,19,20,25,26,27,28,மே 4,5,6,7,8,11,12,13
* கவன நாள்: ஏப்.29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: சிவப்பு,வெள்ளை

* பரிகாரம்:
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு
* ஞாயிறன்று சரபேஸ்வரருக்கு அர்ச்சனை

 
மேலும் மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ... மேலும்
 
temple news
மகம்நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar