பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
திருப்பூர்:திருப்பூரில், ஸ்ரீராமானுஜரின், 1,002வது திருஅவதார விழா, மூன்று நாட்கள் நடைபெற்றது.திருமலை திருப்பதி தேவஸ்தான ஆழ்வார்கள் திவ்ய பிரபந்த செயல் திட்டம், திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கம் மற்றும் ’ஏ கிராண்ட்’ திருமண மஹால் சார்பில், ஸ்ரீராமானுஜரின், 1002வது திருஅவதார விழா நடந்தது. காரமடை, சின்ன தொட்டிபாளையம் ராமானுஜர் கோவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் மற்றும் ராமானுஜர் திருமேனிகள், கிராண்ட் மஹாலில் எழுந்தருளின. கடந்த, 13ம் தேதி, காலை, மகா சுதர்சன ஹோமம், கோமாத பூஜை, திருமஞ்சனம், திருவாராதனை, தீபாராதனை சான்றுமுறை, 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம், மகா திருமஞ்சனம், அலங்கார பூஜையும், ஆண்டாள் திருக்கல்யாண நாட்டிய நாடக நிகழ்ச்சியும் நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று, காலை, 8:00 மணிக்கு மகா திருமஞ்சனம், அலங்கார பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது.மாலையில், நான்காயிரம் திவ்ய பிரபந்த பாடல்கள், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து, ராமானுஜரின் மனித நேயம், ராமானுஜரின் சமயத்தொண்டு ஆகிய தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.