சபரிமலையில் ரூ.18 கோடி செலவில் புதிய அரவணை அப்பம் பிளான்ட்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2012 10:01
சபரிமலை : சபரிமலையில், 18 கோடி ரூபாய் செலவில் புதிய அப்பம் அரவணை பிளான்ட் அமைக்க, தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தேவசம் போர்டு கோரியுள்ளது. சபரிமலை மாஸ்டர் பிளானில், புதிய அப்பம் அரவணை பிளான்ட் அமைக்கும் திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக தேவசம் போர்டு, 18 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது. தினமும் நான்கு லட்சம் டின் அரவணையும், இரண்டு லட்சம் பாக்கெட் அப்பமும் தயாரித்து பேக்கிங் செய்ய வேண்டும். 130 முதல் 150 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் நெய்யில் அப்பம் தயாரிக்க வேண்டும். இந்த புதிய பிளான்ட், மாளிகைப்புறம் கோவில் அருகே அமைக்கப்படுகிறது. பொருட்கள் ஸ்டாக் செய்ய கிட்டங்கியும் அமைக்கப்படுகிறது. இது தொடர்பான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க விரும்புபவர்கள், ஆணையர், திருவிதாங்கூர் தேவசம் போர்டு, நந்தன்கோடு திருவனந்தபுரம் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.