மைசூரு: மைசூரு இட்டிகே கூடிலிலுள்ள, நூற்றாண்டு பழமை வாய்ந்த, கோட்டை மாரியம்மன் கரக விழா இன்று துவங்குகிறது.சாமுண்டீஸ்வரி, கோட்டை மாரியம்மன், ரேணுகா தேவி ஆகிய கரகங்களுக்கும் மன்னர் நால்வடி கிருஷ்ணராஜா உடையார் காலத்தில் கொடுக்கப்பட்டிருந்த மாரியம்மனின் வெள்ளி கவசங்களை அணிவித்து, கரகம் உருவாக்கி, சாமுண்டிமலை படிகட்டு ஓரத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு வந்து, முதலில் சலவைகாரர் வீட்டில் வைத்து விஷேச பூஜை நடத்தப்பட்டது.அதற்கு பிறகு அந்த கரகங்களுக்கு பாலபிஷேகம் நடத்தி, இட்டிகே கூடிலுள்ள ரேணுகா தேவி கோவிலில் வைக்கப்பட்டது. இந்த மைசூரு கரக விழா, 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.