பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்கள் பாதுகாப்பில்லாமல் திறந்தவெளியில் இருப்பதால், மழை வெயிலில் காய்ந்து பாதிக்கப்படைகின்றன. கோவை மாவட்டத்தில் பழமையான கோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முக்கியமானது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தையொட்டி தேர்த்திருவிழா நடைபெறும். பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஷ்வரர் ஆகிய தேர்கள் வீதியுலா வரும். வீதியுலா முடிந்து தேர்நிலையடைந்ததும், ஐந்து தேர்களும் முறையாக பாதுகாக்கப்படும். கடந்த மாதம், 27ம் தேதி பங்குனி உத்திரத்தேர்விழா நடந்து முடிந்தது; மூன்று நாட்களுக்குள் தேர்களை மூடி பாதுகாக்க வேண்டும். ஆனால், பல நாட்கள் ஆகியும் இன்று வரை தேர்கள் தகடுகளால் மூடப்பட்டு பாதுகாக்கப்படவில்லை. இதனால், மழை வெயிலில் காய்ந்து தேரில் உள்ள பூதகனங்கள் பாதிப்படைந்து வருகின்றன.